/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலில் மீன் பிடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
கடலில் மீன் பிடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : மே 12, 2025 11:44 PM

கூவத்துார், கடலுார் ஆலிக்குப்பத்தில், நாட்டுப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கூவத்துார் அடுத்த கடலுார் ஆலிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; மீனவர்.
நேற்று முன்தினம் இரவு நாட்டுப்படகில், மீன் பிடிப்பதற்காக தனியாக கடலுக்குச் சென்றார்.
கடலில் மீன் பிடித்த போது, படகில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 4:00 மணியளவில், இப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், நாட்டுப்படகு கட்டுப்பாடு இல்லாமல் மிதந்து வந்ததால், அருகே சென்று பார்த்துள்ளனர்.
அந்த படகில், வெங்கடேசன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே, நாட்டுப்படகை தங்களது படகில் கட்டி, கரைக்கு கொண்டு வந்து, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரிழப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.