/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 பூங்காக்களில் ரூ.81 லட்சத்தில் உடற்பயிற்சி சாதனங்கள்
/
5 பூங்காக்களில் ரூ.81 லட்சத்தில் உடற்பயிற்சி சாதனங்கள்
5 பூங்காக்களில் ரூ.81 லட்சத்தில் உடற்பயிற்சி சாதனங்கள்
5 பூங்காக்களில் ரூ.81 லட்சத்தில் உடற்பயிற்சி சாதனங்கள்
ADDED : ஜூலை 07, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:பழைய தாம்பரம், சக்தி நகர் உள்ளிட்ட பூங்காக்களில், 81 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில், பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக, திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில் மவுலானா நகர், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, பழைய தாம்பரம், நான்காவது மண்டல அலுவலக வளாகம், சக்தி நகர் ஆகிய ஐந்து பூங்காக்களில், தலா 16 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன.
சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், இப்பணி மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.