/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா, குட்கா விற்ற ஐந்து பேர் கைது
/
கஞ்சா, குட்கா விற்ற ஐந்து பேர் கைது
ADDED : அக் 14, 2024 06:31 AM
மாமல்லபுரம் : அரசு தடைசெய்துள்ள குட்கா பொருட்கள், மாமல்லபுரம் கடைகளில் தொடர்ந்து விற்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார், நேற்று சந்தேகத்திற்குரிய கடைகளில் சோதனை நடத்தினர்.
மல்லிகேஸ்வரர் கோவில் அருகில் உள்ள டீக்கடையில் மணிகண்டன், 51, என்பவரும், மற்றொரு கடையில் சரவணன், 31, என்பவரும், குட்கா பொருட்களை விற்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில், தாழம்பேடை சேர்ந்த புவனேஷ், 21, அருள்ராஜ், 20, ஆகியோரிடம், திருக்கழுக்குன்றம் போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம், 100 கிராம் கஞ்சா இருந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் இந்திரா நகரில் உள்ள மளிகை கடையில், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அந்த கடையில் சோதனை செய்த போது, விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த, 16 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கடையின் உரிமையாளரான தயாளன், 59, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.