ADDED : ஜன 12, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலமடங்கு எகிறிய விமான கட்டணம்
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து திரளானோர் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் புறப்படுவது வழக்கம். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததால், பலர் விமானம் வாயிலாக கோவை, திருச்சி, மதுரை, சேலம், துாத்துக்குடி என ஊர்களுக்கு செல்வர். இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் விலையும் 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது.
துாத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமானங்களில், நேற்று அனைத்து டிக்கெட்டுகளும் முழுதும் நிரம்பிவிட்டன.

