/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலில் சிக்குவோரை மீட்க மிதவை படகு
/
கடலில் சிக்குவோரை மீட்க மிதவை படகு
ADDED : பிப் 06, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், இயற்கை எழில் கடற்கரை, சுற்றுலா பயணியரை கவர்கிறது. இங்குள்ள கடற்பகுதியில் பாறைகள் உள்ளன. செங்குத்து பள்ளங்களுடன் ஆழமாகவும் உள்ளது.
இத்தகைய ஆபத்தை அறியாமல், பயணியர் ஆர்வத்துடன் கடலில் குளிக்கின்றனர். நீச்சல் தெரியாமல், பலர் அலையில் சிக்கி கடலில் மூழ்கி இறக்கின்றனர்.
அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவோரை காப்பாற்ற, பேரூராட்சி நிர்வாகம் உயிர் காப்பாளர் ஒருவரை நியமித்துள்ளது.
அவர் விரைந்து சென்று மீட்க படகு, மிதவை ஜாக்கெட் உள்ளிட்டவை இல்லை.
இதையடுத்து, மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்தினர், சிறிய பைபர் படகு, மிதவை ஜாக்கெட், மீட்பு வளையம் ஆகியவற்றை, நேற்று வழங்கியுள்ளனர்.