/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென்சென்னையில் காலியாகும் வெள்ளம் பாதித்த வீடுகள்
/
தென்சென்னையில் காலியாகும் வெள்ளம் பாதித்த வீடுகள்
ADDED : ஜன 18, 2024 01:50 AM
கடந்த ஆண்டு இறுதியில் பருவ மழையின்போது மிக்ஜாம் புயலால் தென்சென்னையில் தரமணி, வேளச்சேரி, விஜயநகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழதிவாக்கம், ஆதம்பாக்கம், முகலிவாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
இதில், பல்லாயிரம் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்த வெள்ள பாதிப்பில் பெரும்பாலும் நடுத்தர, ஏழை குடும்பங்கள் தான் பாதிக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம், 50,000 ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பத்தார் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள்.
தற்போது, தை மாதம் பிறந்துள்ள நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வீடுகளை காலி செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, கீழ்தளத்தில் வசித்தவர்கள் அதிகம் காலி செய்து வருகின்றனர்.
புயல் மழைக்கு வெள்ளம் பாதிக்காத பகுதிகளில் எதுவென கேட்டறிந்து அங்கு வீடுதேடி குடிபெயர்ந்து வருகின்றனர்.
--நமது நிருபர்--