/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உணவு பாதுகாப்பு வணிகர்களுக்கு பயிற்சி
/
உணவு பாதுகாப்பு வணிகர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 27, 2025 11:08 PM
திருப்போரூர்,
திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலர் லால்வினா பயிற்சியை துவக்கி வைத்தார்.
பயிற்சியில் பங்கேற்ற சாலையோர உணவு வணிகர்களுக்கு, தரச்சான்றுடைய உணவுப் பொருட்களை பயன்படுத்துதல், உரிமம் மற்றும் அனுமதி பெறுவதை பின்பற்றுதல், சுகாதாரமான உணவு, குடிநீர் போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.