/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பகிங்ஹாம் கால்வாயில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
/
திருப்போரூர் பகிங்ஹாம் கால்வாயில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
திருப்போரூர் பகிங்ஹாம் கால்வாயில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
திருப்போரூர் பகிங்ஹாம் கால்வாயில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
ADDED : ஜன 07, 2024 11:25 PM

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர்- - நெம்மேலி இடையிலான சாலை, 3 கி.மீ., நீளத்திற்கு உள்ளது.
இச்சாலை இடையே பகிங்ஹாம் கால்வாய், உப்பளம் பகுதி உள்ளது. போக்குவரத்துக்காக, பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக, பகிங்ஹாம் கால்வாய், உப்பளம் மற்றும் சாலையின் இருபுறமும், கடல் போல் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இங்கு, இறால், நண்டு, மீன்கள் வளர்கின்றன.
மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு மீன், நண்டு ஆகியவற்றை பிடித்து வருகின்றனர்.
தற்போது, வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியுள்ளன. மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் வந்துள்ளன. காலை நேரங்களில், ஏராளமான பறவைகள் ஒரே இடத்தில் குவிவதால், பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
அதனால், சாலையில் செல்லும் மக்கள், பறவைகள் கூட்டத்தை பார்த்து ரசிப்பதுடன், தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.