/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்த வனத்துறை அதிகாரிகள்
/
அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்த வனத்துறை அதிகாரிகள்
அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்த வனத்துறை அதிகாரிகள்
அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்த வனத்துறை அதிகாரிகள்
ADDED : செப் 19, 2025 02:19 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, தாசரிகுன்னத்துார் கிராமத்தில் அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை, வனத்துறை அதிகாரிகள் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சி, தாசரிகுன்னத்துார் கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டமாக வீடுகளில் புகுந்து, உணவுப் பொருட்களை துாக்கிச் சென்றன. தெருவில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்தியும் வந்தன.
இதுமட்டுமின்றி தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்தி வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து, செய்வதறியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு வனச்சரக அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் கிராமத்தில் கூண்டுகள் அமைத்து, அதில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து, ஏழு குரங்குகளைப் பிடித்தனர். பின் அவற்றை, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.