/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
/
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'
ADDED : டிச 31, 2024 01:07 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், இந்திரா அவென்யூ, அசோக் நகரைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர், தன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கேட்டு, கடந்த 2010ல், ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, மின்வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்த பஞ்சாட்சரத்தை, கடந்த 2010 நவ., 15ம் தேதி நேரில் சந்தித்து கேட்டுள்ளார். பஞ்சாட்சரம், 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
உடனே பரணிதரன், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், 2010 நவ., 19ம் தேதி ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை பரணிதரனிடம் கொடுத்து அனுப்பினர்.
லஞ்ச பணத்தை பரணிதரனிடம் இருந்து, பஞ்சாட்சரம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வசந்தகுமார், பஞ்சாட்சரத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.