/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் முன்னாள் தலைவர் மீண்டும் வெற்றி
/
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் முன்னாள் தலைவர் மீண்டும் வெற்றி
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் முன்னாள் தலைவர் மீண்டும் வெற்றி
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் முன்னாள் தலைவர் மீண்டும் வெற்றி
ADDED : நவ 14, 2024 09:44 PM
புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில், வணிகர் சங்கம் இயங்குகிறது. சங்க தலைவராக, அ.தி.மு.க., பிரமுகர் காதர் உசேன் உள்ளார். உறுப்பினர்களான வியாபாரிகள், அவரையே தொடர்ந்து ஆதரித்தனர்.
இச்சூழலில், புதுப்பட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவர் பக்கீர் முகமது, சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்தல் நடத்துமாறு, போர்க்கொடி துாக்கினார்.
மேலும், சங்க தலைவர் பதவியை கைப்பற்ற விரும்பியதாக கூறப்படும, சங்க துணைத் தலைவரான, வாயலுார் ஊராட்சி முன்னாள் தலைவர் அப்துல் உசேன், அவருடன் இணைந்தார்.
தேர்தல் வலியுறுத்தலைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிக்குழுவினர் நியமிக்கப்பட்டு, வேட்புமனு பெறப்பட்டது. தற்போதைய தலைவர் காதர் உசேன் மற்றும் முஹம்மது சலாஹுதீன் ஆகியோர் மட்டுமே வேட்புமனு அளித்தனர்.
தேர்தலுக்கு வலியுறுத்திய தரப்பினரோ, போட்டியிடாமல் தவிர்த்து, புதுப்பட்டினம் அனைத்து வணிகர் சங்கம் செயல்படுவதாகவும், தலைவர் பக்கீர்முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளதாகவும், பதாகை அமைத்து அறிவித்தனர்.
இநிலையில், கடந்த 12ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 519 ஓட்டுகளில், 185 ஓட்டுகள் பதிவான நிலையில், அங்கு எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு, தேர்தலை நடத்தவிடாமல் முடக்கினர்.
இதுதொடர்பாக, சங்கம் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்புடன் ஆலோசித்து, பதிவான ஓட்டுகளை மட்டும் கணக்கிட்டு, அதிக ஓட்டுகள் பெற்றவரை தலைவராக அறிவிப்பது என முடிவெடுத்து, வேட்பாளர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.
நேற்று, பேரமைப்பின் தலைமைச் செயலர் ராஜ்குமார், துணைத் தலைவர் அப்துல் சமது, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில், மதுராந்தகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
காதர் உசேன் 126 ஓட்டுகள் பெற்று, மீண்டும் தலைவராக வென்றார். போட்டியாளர் முஹம்மது சலாஹுதீன் 59 ஓட்டுகள் பெற்றார். அதற்கான சான்றிதழை, பேரமைப்பு நிர்வாகிகள் அளித்து, புதுப்பட்டினத்தில் இச்சங்கம் மட்டுமே பேரமைப்புடன் இணைந்த ஒரே அங்கீகாரம் பெற்ற சங்கம் என்றும் அறிவித்தனர்.