/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்புலியூர் ஏரி உடைப்பை தவிர்க்க ரூ.96 கோடியில் கால்வாய்க்கு அடிக்கல்
/
இரும்புலியூர் ஏரி உடைப்பை தவிர்க்க ரூ.96 கோடியில் கால்வாய்க்கு அடிக்கல்
இரும்புலியூர் ஏரி உடைப்பை தவிர்க்க ரூ.96 கோடியில் கால்வாய்க்கு அடிக்கல்
இரும்புலியூர் ஏரி உடைப்பை தவிர்க்க ரூ.96 கோடியில் கால்வாய்க்கு அடிக்கல்
ADDED : மார் 14, 2024 10:38 PM
பெருங்களத்துார்,:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் கிழக்கு பகுதியில், விமானப்படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி, பெரிய ஏரி உள்ளது.
மழைக்காலத்தில், இந்த ஏரி நிரம்பினால், இந்திய விமானப் படை பயிற்சி மையத்தினர், கலங்கல் பகுதியை உடைத்து, தண்ணீர் வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
உடைக்கப்பட்ட இடத்தை அடைக்க செல்லும் பொதுப்பணித் துறையினரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்புவதும் நடக்கிறது.
அடிக்கடி இப்படி நடப்பதால், கலங்கலை உடைப்பதை தடுப்பதோடு, மழைக்காலத்தில் அருள் நகர், அண்ணா தெரு, ராஜகோபால் தெரு, ரோஜா தோட்டம், பவானி தெரு, பழைய ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்குவதை தடுக்க, மூடுகால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 96.50 கோடி ரூபாய் செலவில், ஏரியில் இருந்து 3.5 கி.மீ., துாரத்திற்கு மூடுகால்வாய் மற்றும் இந்திய விமானப்படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி 'ஷட்டர்' வசதியுடன் கூடிய தடுப்பு சுவர் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது.
இரும்புலியூர் ஏரியில் இருந்து துவங்கும் மூடுகால்வாய், ரயில்வே லைனை கடந்து, முடிச்சூர் சாலையில் கட்டப்பட்டுள்ள மூடுகால்வாயுடன் இணைக்கப்படும்.
இந்த கால்வாய், ஏரியில் இருந்து ரயில்வே லைன் வரை, 11 அடி அகலம், 7 அடி ஆழத்திலும், ரயில்வே லைனின் இருந்து, முடிச்சூர் சாலை வரை, 13 அடி அகலம், 8 அடி ஆழத்திலும் கட்டப்படும் என்றும், ஓராண்டில் இப்பணி முடியும் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

