ADDED : நவ 24, 2024 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. விராட் விஸ்வகர்மா சேவாலயா மற்றும் மல்லை விஸ்வகர்மா ஜன நல சங்கம் ஆகியவை இணைந்து, இம்முகாமை நடத்தின.
சேவாலயா நிறுவனர் வித்யாதரன், இம்முகாமை துவக்கிவைத்து, சேவாலயா சார்பில் அளிக்கப்படும் சேவைகள் குறித்து விளக்கினார். ஹிந்து சமய அறநிலையத்துறை வல்லுனர் குழு தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, ஜன நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர், கண் பார்வை, கண் தசைகள், வண்ண பார்வை ஆகிய பரிசோதனைகள் செய்தனர். மதிப்பீடு, ஒளி விலகல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, மூக்கு கண்ணாடி அணிதல், சிகிச்சைகள் குறித்து பரிந்துரைத்தனர். இதில், 150 பேர் பயன்பெற்றனர்.