/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் நாராயணபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
/
நந்திவரம் நாராயணபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
நந்திவரம் நாராயணபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
நந்திவரம் நாராயணபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : நவ 29, 2024 08:27 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - நாராயணபுரம் பிரதான சாலையில் உள்ள செங்கழனி அம்மன் கோவில் வளாகத்தில், இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை, 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணன் செய்திருந்தார்.
இந்த முகாமில், செட்டிநாடு பொது மருத்துவமனை கண் மருத்துவர்கள் பங்கேற்று, அப்பகுதிவாசிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர். நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இந்த முகாம் நடந்தது.
இதில், கண்புரை மற்றும் பார்வை கோளாறு தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும், பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பத்து பேருக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது. 100 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
இந்த முகாமில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.