/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அருங்குணத்தில் 23 இருளர் குடும்பத்துக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

ADDED : மே 31, 2025 11:51 PM

மதுராந்தகம்,மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருங்குணம் ஊராட்சியில் உள்ள இருளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
அருங்குணம் ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் 34 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு, வீட்டுமனை பட்டா இல்லாததால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
தற்போது, அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் யோகேஷ் ஏற்பாட்டில், அருங்குணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு, மதுராந்தகம் வட்டாட்சியர் மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, ஆட்சேபனையற்ற பகுதி என தேர்வு செய்யப்பட்டது.
நேற்று, 23 குடும்பங்களுக்கு, மதுராந்தகம் அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., மரகதம் பங்கேற்று இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார்.
நிகழ்வில், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பட்டா பெற்றவர்கள், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.