/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை, திருவிடந்தை கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச ஆன்மிக பயணம்
/
மாமல்லை, திருவிடந்தை கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச ஆன்மிக பயணம்
மாமல்லை, திருவிடந்தை கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச ஆன்மிக பயணம்
மாமல்லை, திருவிடந்தை கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச ஆன்மிக பயணம்
ADDED : செப் 22, 2024 03:30 AM

மாமல்லபுரம்:மூத்த குடிமக்கள் கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலாவாக, மாமல்லபுரம் உள்ளிட்ட வைணவ கோவில்களில் தரிசித்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், வைணவ கோவில்களுக்கு ஆன்மிக பயணம், ஆடி மாத அம்மன் கோவில்கள் பயணம், அறுபடை வீடுகளான முருகன் கோவில்களுக்கு பயணம், காசி விஸ்வநாதர் கோவில் பயணம் என, ஆன்மிக பயணதிட்டங்களை செயல்படுத்துகிறது.
அதைத் தொடர்ந்து, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயண திட்டம் துவக்குவதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, மூத்த குடிமக்கள் 40 பேர், வைணவ கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம் சென்றனர்.
அத்துறையின் நான்கு செயல் அலுவலர்களின் மேற்பார்வையில், பக்தர்கள் குழுவினர், சென்னை பார்த்தசாரதி கோவிலில் முதலில் தரிசனம்செய்தனர்.
பின்னர், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்தனர்.
கோவில் தல வரலாறு குறித்து, அவர்களுக்கு விளக்கி, பிரசாதம், பழங்கள் வழங்கப்பட்டன. திருவிடந்தையில் அன்னதானம் வழங்கப்பட்டது. அடுத்து, திருநீர்மலை நீலவண்ண பெருமாள் கோவிலில் தரிசிக்க சென்றனர்.
அதேபோல், சுற்றுலாத்துறை வாயிலாக கட்டண முறையில் செயல்படுத்தும் ஆன்மிக பயணமாக, 30 பேர் இரண்டு கோவில்களிலும் தரிசித்துவழிபட்டனர்.