ADDED : செப் 14, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று இரு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையதுறையின் கீழ் உள்ள கோவில்களில், அறநிலையத்துறை சார்பில், 60,000 ரூபாய் செலவில் திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இரு ஜோடிகளுக்கு, கோவில் வளாகத்தில், நேற்று காலை 9:00 மணியளவில், வேத மந்திரங்கள் முழங்க இலவச திருமணம் நடந்தது.
இத்திட்டத்தில், 60,000 ரூபாய் மதிப்பில் மணமக்களுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம் வழங்கப்பட்டது. மேலும் சீர்வரிசை பொருட்கள், பாத்திரங்கள், அறுசுவை விருந்து உள்ளிட்டவை வழங்கப்பட்டன.