/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிக்கடி மின் தடை சிறுதாவூரில் அவதி
/
அடிக்கடி மின் தடை சிறுதாவூரில் அவதி
ADDED : ஜூன் 16, 2025 11:49 PM
திருப்போரூர், முன்அறிவிப்பின்றி சிறுதாவூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், அப்பகுதியின் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் ஊராட்சியில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள நான்கு கிணறுகளில் இருந்து, குழாய்கள் மூலம் திருப்போரூர் பேரூராட்சி சார்ந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இங்கு கடந்த சில நாட்களாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படும்போது துாக்கமின்றி அவதிக்குள்ளாகின்றனர். மேலும், விவசாயம், குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற பணி பாதிக்கப் படுகிறது.
எனவே, மின்வாரிய அலுவலகத்தினர் சிறுதாவூர் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.