/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தந்தை பேசாததால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை
/
தந்தை பேசாததால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : மார் 18, 2024 03:25 AM

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு; கராத்தே மாஸ்டர். இவரது மகள் ரக் ஷினி, 20; தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றிற்கு தந்தை பாபுவின் அனுமதியின்றி சென்றுள்ளார். இதனால், பாபு தன் மகளிடம் இரண்டு நாட்களாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த ரக் ஷினி, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தன் படுக்கையறையில் இருந்த மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து சென்று பார்த்த பெற்றோர், துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ரக் ஷினி உடலை மீட்டனர்.
பாலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

