/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் பணிகளுக்கு செங்கையில் நிதி ஒதுக்கீடு
/
குடிநீர் பணிகளுக்கு செங்கையில் நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 16, 2025 12:15 AM
செங்கல்பட்டு,செங்கல்பட்டு நகராட்சியில், பெரிய மணியக்கார தெருவில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில், மின்சார அறை மற்றும் காவலர் அறையை புதுப்பிக்க வேண்டும்.
தாழம்பூ தெருவில் குடிநீர் பகிர்மான குழாய் மற்றும் மதுரைவீரன் கோவில் தெரு, கேசவனார் தெரு, மசூதி மலைத்தெரு பகுதியில், கூடுதல் குடிநீர் தேவை என, நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, மின்சார அறை மற்றும் காவலர் அறை பராமரிப்பு பணி செய்ய மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய நகர்மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தாழம்பூ தெருவில், குடிநீர் பகிர்மான குழாய் அமைக்க 4.90 லட்சம் ரூபாய், மதுரைவீரன் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றிலுள்ள சிறுமின்விசை டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய 6.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 14.40 லட்சம் ரூபாய் பணிகளுக்கு, குடிநீர் நிதியில் செலவு செய்ய, நகரமன்றம் அனுமதி வழங்கி, தீர்மானம் நிறைவேற்றியது.
இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.