/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 07, 2024 08:23 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, குடிநீர், மின் இணைப்பு வசதிகளை செய்ய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சியில், அனுமந்தபுத்தேரி, குண்டூர் ஆகிய பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இங்கு, தினமும், நகரவாசிகள் குடிநீர் எடுத்துச்த்லெ்கின்றனர்.
இத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, நத்தம், வேதாசலம்நகர், அழகேசன் நகர் உள்ளிட்ட 12 வார்டுகளில், குடிநீர் சுத்திரிகப்பு நிலையம் அமைக்க, பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர், மின் இணைப்பு வசதிகளை செய்துதர, நகரமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்காக 12 வார்டுகளில், குடிநீர், மின் இணைப்பு வசதிகளை செய்துதர, 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.