/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கொத்தடிமைகள் திருவள்ளூரில் மீட்பு
/
செங்கை கொத்தடிமைகள் திருவள்ளூரில் மீட்பு
ADDED : டிச 19, 2024 08:59 PM
நெரும்பூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கொத்தடிமையாக இருந்த, செங்கல்பட்டு மாவட்ட இருளர்கள் மீட்கப்பட்டனர்.
கல்பாக்கம் அடுத்த நல்லாத்துார் ஊராட்சி, பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த இருளர்கள் அருள், 38, அவரது மகன் லோகேஷ், 15.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கர்லம்பாக்கம் பகுதியில், காளியப்பன் என்பவர் இவர்களுக்கு முன்பணம் அளித்து, கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி உள்ளார்.
இதுகுறித்து, தன்னார்வ நிறுவனத்தினர் அளித்த புகாரின்படி, திருத்தணி கோட்டாட்சியர் தீபா இவர்களை மீட்டு விசாரித்து, செங்கல்பட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தார்.
நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான், நல்லாத்துார் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் ஆகியோர், மீட்கப்பட்டவர்களை நேற்று, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.