/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
/
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
ADDED : ஜன 24, 2025 07:49 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில், போலீசார், கைது செய்தனர்.
கல்பாக்கம் அடுத்த, வாயலுார் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீனா என்ற புருஷோத்தமன், 24. கஞ்சா வியாபாரி. இவர், நான்கு பேருடன், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி, விற்பனை செய்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், தீனா உட்பட நான்கு பேரை, கைது செய்து, 2.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புருஷேத்தமனை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டர் அருண்ராஜ், நேற்று, உத்தரவிட்டார். புழல் சிறையில் உள்ள, அவரிடம், குண்டர் சட்ட நகலை, போலீசார் வழங்கினர்.