/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பள்ளி அருகில் கஞ்சா விற்றவர் கைது
/
மாமல்லை பள்ளி அருகில் கஞ்சா விற்றவர் கைது
ADDED : செப் 25, 2024 07:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஒற்றைவாடைத் தெருவைச் சேர்ந்தவர் செவன் அப் மோகன் என்ற மோகன், 40.
நேற்று காலை 8:45 மணிக்கு, பூஞ்சேரி பகுதியில் உள்ள மாமல்லபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், இவர் கஞ்சா விற்பதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு சென்ற போலீசார், பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த அவரை கைது செய்து, அவரிடமிருந்து, தலா 15 கிராம் கொண்ட, 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.