/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையெங்கும் குப்பை தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
/
சாலையெங்கும் குப்பை தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
சாலையெங்கும் குப்பை தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
சாலையெங்கும் குப்பை தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 15, 2024 01:16 AM

கூடுவாஞ்சேரி:ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலை எங்கும் குப்பை தேக்கம் அடைந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியதாவது:
ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலை எங்கும் குப்பை தேக்கமடைந்துள்ளது. ஊராட்சி சார்பில் தேங்கியுள்ள குப்பையை முறையாக அகற்றுவது இல்லை.
இது குறித்து, தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால், குப்பையை அகற்றுவதில், ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது.
இதனால், சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கொசு தொல்லை, தொற்றுநோய் பரவும் அபாயம், சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.
தற்போது பெய்து வரும் மழைநீர் குப்பையில் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. அதனால், காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.