/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலையடிவாரத்தில் குப்பை கழிவுகள் வன விலங்குகளுக்கு நோய் பாதிப்பு
/
மலையடிவாரத்தில் குப்பை கழிவுகள் வன விலங்குகளுக்கு நோய் பாதிப்பு
மலையடிவாரத்தில் குப்பை கழிவுகள் வன விலங்குகளுக்கு நோய் பாதிப்பு
மலையடிவாரத்தில் குப்பை கழிவுகள் வன விலங்குகளுக்கு நோய் பாதிப்பு
ADDED : நவ 22, 2024 12:14 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், பெரும்பேர்கண்டிகை ஊராட்சி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரும்பேர்கண்டிகை செல்லும் வழியில், வஜ்ஜிரகிரி மலை உள்ளது.
இதில், மான், காட்டுப்பன்றி, நரி, முயல், உடும்பு, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இம்மலையடிவாரத்தில், தத்தாத்ரேயே கோவில் உள்ளது.
இக்கோவில் அருகே, மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் கோழி இறைச்சி கழிவுகள், ஹோட்டல் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் என, 5 டன்னுக்கும் அதிகமான குப்பை கழிவுகளை, மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.
இதனை உண்பதற்காக, வனவிலங்குகள் இப்பகுதியில் உலா வருவதால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குகின்றன. தற்போது பெய்துவரும் மழையில், குப்பை நனைந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சு திணறல், சுவாசப் பிரச்னைகளால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி, கெட்டுப்போன உணவுக் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள், நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றன.
எனவே, அப்பகுதியில் குப்பை கொட்டாதவாறு இரும்பு கம்பி வேலி அமைத்து, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
குப்பையை முறையாக அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.