/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எந்த நேரமும் குப்பை சேகரிப்பு மதுராந்தகத்தில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 29, 2025 12:07 AM

மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சியில் குப்பை சேகரிப்பு பணியால், காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.
இங்குள்ள மதுராந்தகம் மருத்துவமனை சாலை, ஜி.எஸ்.டி., சாலை, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தேரடி வீதி ஆகியவை, முக்கியமான பகுதிகள்.
இப்பகுதிகளில், டிராக்டர் வாகனத்தில் குப்பை சேகரிக்கும் பணியில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 8:00 மணியில் இருந்து 10:00 மணி அளவில், ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, அதிகாலை நேரத்தில் குப்பை சேகரிக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.