/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 21, 2024 11:37 PM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
கடமலைப்புத்துார் புறவழிச்சாலை ஓரம் கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள், ஹோட்டல் உணவுக் கழிவுகள் என, டன் கணக்கில் குப்பையை மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.
இதை சிலர், தீயிட்டு எரித்து விடுகின்றனர்.
இதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
குப்பை கொட்டப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, மீண்டும் குப்பை கொட்டாதவாறு, புறவழிச் சாலை ஓரம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்ககை எழுந்துள்ளது.