/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்வாய் கூட்டு சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
நெல்வாய் கூட்டு சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
நெல்வாய் கூட்டு சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
நெல்வாய் கூட்டு சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 16, 2025 02:21 AM

மதுராந்தகம்,
மதுராந்தகம் ஒன்றியம், நெல்வாய் கூட்டுச் சாலையில் குவியும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
புக்கத்துறை -- உத்திரமேரூர் மாநில சாலையில், நெல்வாய் கூட்டுச் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், வேலுார் என, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதிகளில், வீடுகள் மற்றும் ஹோட்டல்கள், நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த கடை மற்றும் வீடுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தையும், அப்பகுதியில் இரவில் சாலையோரம் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர்.
இந்த கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் தினமும் அகற்றாத காரணத்தால், குப்பை குவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையில் மழைநீர் சேர்ந்ததால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இந்த, குப்பையை நாய்கள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால், அப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.
அங்கு வசிப்பவர்கள், நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைகின்றனர்.
எனவே, அப்பகுதியில் கொட்டப்படும் குப்பையை அப்புறப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.