/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரத்தில் குப்பை குவிப்பு மறைமலைநகரில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரத்தில் குப்பை குவிப்பு மறைமலைநகரில் சுகாதார சீர்கேடு
சாலையோரத்தில் குப்பை குவிப்பு மறைமலைநகரில் சுகாதார சீர்கேடு
சாலையோரத்தில் குப்பை குவிப்பு மறைமலைநகரில் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 11, 2024 12:20 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி அண்ணா சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக கட்டடங்கள் உள்ளன.
இந்த சாலை மறைமலைநகர் சிப்காட் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.
மேலும் கலிவந்தபட்டு, கூடலுார் காயிரம்பேடு உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலைநகர் வந்து செல்ல, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் ஓரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள நடைபாதையில், தொடர்ந்து அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இதை தெரு நாய்கள் மற்றும் மாடுகள் கிளறுவதால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள் இப்பகுதியில் குப்பை கொட்டுவதால், அங்கு தெரு நாய்கள் அதிக அளவில் குவிந்து சண்டையிட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இங்கு கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து சாலையிலும், வனப்பகுதிக்கும் செல்கிறது. வனத்துறை சார்பில் இந்த பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி, குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
எனவே, சாலை ஓரம் குப்பை கொட்டுவோர் மீது, நகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.