/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீண்டநாள் அகற்றப்படாத குப்பை ஊரப்பாக்கம் ஊராட்சி மெத்தனம்
/
நீண்டநாள் அகற்றப்படாத குப்பை ஊரப்பாக்கம் ஊராட்சி மெத்தனம்
நீண்டநாள் அகற்றப்படாத குப்பை ஊரப்பாக்கம் ஊராட்சி மெத்தனம்
நீண்டநாள் அகற்றப்படாத குப்பை ஊரப்பாக்கம் ஊராட்சி மெத்தனம்
ADDED : மார் 02, 2024 10:37 PM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் குப்பைக் கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளது.
இந்த குப்பை கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் தினந்தோறும் அகற்ற வேண்டும். ஆனால், ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் அலட்சியமாக உள்ளது. இதனால், சாலையோரம் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், காரணை புதுச்சேரி பிரதான சாலையில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் அருகே குப்பை கழிவுகள் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளது. இதை அகற்ற வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே, ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சாலையோரங்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

