/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'கேலோ' இந்தியா போட்டி விழிப்புணர்வு
/
'கேலோ' இந்தியா போட்டி விழிப்புணர்வு
ADDED : ஜன 18, 2024 01:45 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியையொட்டி, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, செங்கல்பட்டு டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் நேற்று துவக்கி வைத்தார்.
இங்கு துவங்கிய மாரத்தான் ஓட்டம், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, பழைய பேருந்து நிலையம் சென்று, அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கம் அருகில் நிறைவடைந்தது.
அதன்பின், செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி கலையரங்கத்தில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி, சப் - -கலெக்டர் நாராயண சர்மா தலைமையில் நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நகராட்சி தலைவர் தேன்மொழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், உடற்கல்வி ஆய்வாளர் திருநிறைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பர வாகனத்தை, எம்.எல்.ஏ., வரலட்சுமி துவக்கி வைத்தார். அதன்பின், மாமல்லபுரம் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.