/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது காப்பீடு முகாம் 30 வரை நடக்கிறது
/
பொது காப்பீடு முகாம் 30 வரை நடக்கிறது
ADDED : ஜூன் 21, 2025 06:49 PM
செங்கல்பட்டு:இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சார்பில், பொது காப்பீட்டு விழிப்புணர்வு முகாம், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
செங்கல்பட்டு கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் சண்முகச்சாமி அறிக்கை:
இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி, செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுமக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் நோக்கில், 'புரடக்ட் 360' என்ற புதிய பொது காப்பீடு இயக்க முகாம், கடந்த 10ம் தேதி துவங்கியது. வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
மக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில், ஜி.ஏ.ஜி., மோட்டார் வாகன காப்பீடு, சுகாதார காப்பீடு, டாப் - அப் காப்பீடு ஆகிய முக்கிய திட்டங்கள் அறிமுக படுத்தப்படுகின்றன.
இத்திட்டம், மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. காப்பீடு இல்லாத மற்றும் காப்பீட்டு சேவைகள் குறைவாக உள்ள பகுதிகளில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.