/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி கர்ப்பம்: கணவருக்கு 'போக்சோ'
/
சிறுமி கர்ப்பம்: கணவருக்கு 'போக்சோ'
ADDED : மார் 17, 2024 02:17 AM
மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் அருகே உள்ள கீழ்அத்தி வாக்கம் கிராமம், இருளர் குடியிருப்பைச் சேர்ந்த முத்து, 22, என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இது, உறவினர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அச்சிறுமியை, முத்துவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.
நேற்று முன்தினம், செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மகப்பேறு பரிசோதனைக்காக அச்சிறுமி சென்றுள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதனையில், 16 வயது சிறுமி என தெரியவந்தது. உடனே, செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இத்தகவலின்படி, அவரது கணவர் மீது, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

