/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு வலை
/
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு வலை
ADDED : பிப் 17, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவனேஷ், 21. இவரும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த ஜன., 12ம் தேதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தான் ஆறு வாரம் கர்ப்பமாக உள்ளதாகவும், காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.