/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு பூட்டை உடைத்து 5 சவரன் நகை 'ஆட்டை'
/
வீடு பூட்டை உடைத்து 5 சவரன் நகை 'ஆட்டை'
ADDED : டிச 08, 2024 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த பேரமனுார் எம்.டி.சி., நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 55. கடந்த 4ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் தந்தையை பார்க்க சென்றார்.
நேற்று முன்தினம் மதியம், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், இவருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, கிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 5 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.