/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரத்தியில் தொடரும் ஆடு திருட்டு
/
ஒரத்தியில் தொடரும் ஆடு திருட்டு
ADDED : பிப் 02, 2025 08:10 PM
அச்சிறுபாக்கம்:ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வருவதால், கால்நடைகள் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரத்தி, ராமாபுரம், எலப்பாக்கம், முருங்கை, ஆணைக்குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் மிக முக்கிய பிரதான தொழிலாகும்.
ஒரத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராம பகுதிகள் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லை பகுதிகளில் அமைந்துள்ளன.
இரவு நேரத்தில் டாட்டா ஏஸ் கூண்டு வாகனத்தில், உலா வரும் மர்ம நபர்கள், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடு மற்றும் மாடுகளை திருடி செல்கின்றனர்.
நேற்று முன்தினம், ஆணைக்குன்னம் பகுதியில், எட்டு ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அதனால், கால்நடை வளர்ப்போர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
எனவே, ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கால்நடைகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.

