/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு
/
நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு
ADDED : டிச 31, 2025 06:02 AM

பெருங்களத்துார்: பெருங்களத்துாரில், நல்ல தண்ணீர் குளம் மற்றும் அப்துல் கலாம் பூங்கா ஆகியவற்றை, 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி, நல்ல தண்ணீர் குளம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த குளத்து நீர், தற்போது கால்நடைகள் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
போதிய பராமரிப்பு இல்லாததால், குப்பை கொட்டப்பட்டும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. பழமையான இக்குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ., சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, நல்ல தண்ணீர் குளம் மற்றும் அருகே உள்ள அப்துல் கலாம் பூங்கா ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

