/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்சிவிளாகம் இருளர் குடியிருப்பு மந்தகதியில் கட்டுமான பணி
/
ஆட்சிவிளாகம் இருளர் குடியிருப்பு மந்தகதியில் கட்டுமான பணி
ஆட்சிவிளாகம் இருளர் குடியிருப்பு மந்தகதியில் கட்டுமான பணி
ஆட்சிவிளாகம் இருளர் குடியிருப்பு மந்தகதியில் கட்டுமான பணி
ADDED : பிப் 14, 2024 10:23 PM

செய்யூர்:செய்யூர் அருகே நெடுமரம், சீக்கனாங்குப்பம், கொடூர், மடையம்பாக்கம் போன்ற கிராமங்களில், 40க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள், வீட்டு மனை மற்றும் வீடு இல்லாமல் வசித்து வருகின்றனர்.
வீடு வேண்டி, பல ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் கிராமத்தில், 33 இருளர் குடும்பத்தினருக்கு வீடு கட்ட, அரசு சார்பாக இடம் தேர்வு செய்யப்பட்டது.
பின், பசுமை வீடு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு பிப்., 23ம் தேதி, வீடு கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
பணி துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், தற்போது வரை அடித்தளம் மட்டுமே அமைக்கப்பட்டு, ஆமை வேகத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இருளர் குடியிருப்பு கட்டுமான பணியை துரிதப்படுத்தி, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

