/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துாரில் தீப்பற்றி அரசு விரைவு பஸ் நாசம்
/
கூவத்துாரில் தீப்பற்றி அரசு விரைவு பஸ் நாசம்
ADDED : மார் 19, 2025 12:36 AM

கூவத்துார்:புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, 25 பயணியருடன், திருவான்மியூர் பணிமனையைச் சேர்ந்த அரசு விரைவுப் பேருந்து சென்றது. பேருந்தை, ஓட்டுனர் தியாகராஜன் என்பவர் இயக்கினார்.
கடப்பாக்கம் அடுத்த நல்லுார் கிராமத்தில் சென்ற போது, சாலை நடுவே இருந்த தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள், மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் சேதமான பேருந்தை, திருவான்மியூர் பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
கூவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, திடீரென பேருந்தின் இன்ஜினில் இருந்து, அதிக அளவில் புகை வந்துள்ளது.
இதனால், பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர், நடத்துனர் கீழே இறங்கியுள்ளனர்.
அப்போது திடீரென, பேருந்து தீப்பற்றி எரியத் துவங்கி உள்ளது.
தகவல் அறிந்து வந்த செய்யூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கல்பாக்கம் தீயணைப்புத் துறையினர், போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும், பேருந்து எரிந்து நாசமானது.