/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்
/
அரசு பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்
அரசு பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்
அரசு பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்
ADDED : அக் 14, 2025 12:35 AM

பவுஞ்சூர்,
பவுஞ்சூரில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில், வட்டார அளவிலான கலைத் திருவிழா நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், லத்துார் கல்வி வட்டாரத்தில், 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன.
பள்ளிக்கல்வி துறை சார்பில், பள்ளி அளவிலான கலைத் திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, வட்டார அளவிலான கலைத் திருவிழா, பவுஞ்சூரில் உள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், நேற்று நடந்தது.
இதில் பாரம்பரிய நடனமான பரதக்கலை, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், பறை இசை, தவில், புல்லாங்குழல் இசை போன்ற பேட்டிகள் நடந்தன.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, களிமண் சுதை வேலைப்பாடு மற்றும் மணல் சிற்பம் செய்தல், ரங்கோலி ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில், 75 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்றும், நாளையும் கலைத் திருவிழா நடக்க உள்ளது.