/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
2 மாதமாக டிரான்ஸ்பார்மர் பழுது நயினார்குப்பம் மக்கள் அவதி
/
2 மாதமாக டிரான்ஸ்பார்மர் பழுது நயினார்குப்பம் மக்கள் அவதி
2 மாதமாக டிரான்ஸ்பார்மர் பழுது நயினார்குப்பம் மக்கள் அவதி
2 மாதமாக டிரான்ஸ்பார்மர் பழுது நயினார்குப்பம் மக்கள் அவதி
ADDED : அக் 14, 2025 12:35 AM
செய்யூர் நயினார்குப்பம் கிராமத்தில், பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து, கிராமத்தில் உள்ள 80 வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன், இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து பழுதடைந்தது. இதனால், தற்காலிகமாக காளியம்மன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்பட்டு தற்போது மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
180க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு ஒரே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால், காலை மற்றும் இரவு நேரத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு, வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன.
மேலும் இரவு நேரத்தில் மின்விசிறிகள் மெதுவாக இயங்குவதால், போதிய காற்றோட்டம் இல்லாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.