/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
/
அரசு பள்ளி ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
ADDED : நவ 29, 2024 12:13 AM

பள்ளிப்பட்டு,திருவள்ளூர் கல்வி மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சேகர், 57, என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், இப்பள்ளியில் பயிலும் இரு மாணவியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆசிரியர் சேகரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில், கடந்த 10 நாட்களில் சேகர் உட்பட மூன்று ஆசிரியர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.