ADDED : நவ 09, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:ஊராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தினமாக, நவ., 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது நடைமுறையில் உள்ளது.
கடந்த நவ., 1ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். தீபாவளி பண்டிகை மறுநாளில், கூட்டம் நடத்துவது சிரமம் என்பதால், கூட்டத்தை ஒத்திவைக்குமாறு, ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
தமிழக அரசும் பரிசீலித்து, தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைத்தது. இந்நிலையில், வரும் 23ம் தேதி கிராமசபை நடத்துமாறு, ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.