/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பசுமை தீபாவளி விழிப்புணர்வு போட்டி
/
பசுமை தீபாவளி விழிப்புணர்வு போட்டி
ADDED : அக் 16, 2025 12:58 AM

திருப்போரூர்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள திருப்போரூர், செம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பசுமை தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. மேலும், தீபாவளியை பட்டாசு இன்றி, பசுமையை வலியுறுத்தும் வகையில் கொண்டாட விழிப்புணர்வுடன் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட சப் - கலெக்டர் மாலதி ஹெலன் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
திருப்போரூர் தாசில்தார் சரவணன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.