/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 16, 2025 12:58 AM

திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூரில், புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில், முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆனந்த் துவக்கி வைத்தார். பேரணியில், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மக்கள் என, 250 பேர் பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை வழியாக கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகில் நிறைவடைந்தது.
இதில், பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வாங்குவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.