/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலத்தின் கீழ் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
/
பாலத்தின் கீழ் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 16, 2025 12:57 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மேம்பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாமல்லபுரத்தில், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு, முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இச்சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக குறுக்கில் கடந்து, அடிக்கடி விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், தொலை துார வாகனங்கள் கடக்க மேம்பாலம் கட்டப்பட்டு, சரிவுபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இச்சாலையில் இருந்து மாமல்லபுரத்திற்குள் வந்து செல்லும் வாகனங்கள், பாலத்தின் கீழ் பகுதி வழியாக கடக்கின்றன. சாலை பணிகள் முடியாத நிலையில், பாலத்தின் கீழ் பகுதியில் பள்ளமாக உள்ளது.
அங்கு மழைநீர் குளம்போல் தேங்குவதால், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. பள்ளத்தில் ஜல்லிகற்கள், கிரஷர் துகள்கள் நிரப்பி, மழைநீர் தேங்காமல் தடுக்குமாறு, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.