/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் அவதி
/
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் அவதி
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் அவதி
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் அவதி
ADDED : அக் 16, 2025 12:55 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் இடையிலான நெடுஞ்சாலையில், பேருந்து நிறுத்தங்கள் முன் தனியார் நிறுவன வாகனங்கள் பல மணி நேரங்களாக நிறுத்தப்படுவதால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பல கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறமும் 30க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில், திம்மாவரம், மகாலட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் முன் தனியார் பேருந்துகள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. தவிர, வார விடுமுறை நாட்களில் தொடர்ந்து முழு நேரமும் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் பயணியரை இறக்கி, ஏற்றி செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, காவல் துறையும் நெடுஞ்சாலை துறையும் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.