UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்: நத்தம் கரியச்சேரியில், வரும் 18ம் தேதி, மக்கள் குறை கேட்பு முகாம் நடத்தப்படும் என, மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருக்கழுக்குன்றம் தாலுகா, கல்பாக்கம் அடுத்த, நத்தம் கரியச்சேரி பகுதியில், பொதுமக்களின் குறைகளை கேட்டறியும், மக்கள் தொடர்பு முகாம் அக்., 21ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அன்று பெய்த கனமழை காரணமாக, இம்முகாம் நடத்தப்படவில்லை.
மீண்டும் வரும் 18ம் தேதி, இம்முகாம் நத்தம் கரியச்சேரியில் நடக்க உள்ளது. அன்று காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், பொது மக்கள் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என, மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
