/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
/
தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : டிச 26, 2024 12:45 AM
செங்கல்பட்டு,
தாம்பரத்தில், மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மண்டலங்கள் வாரியாக, நடைபெற உள்ளது. இதில், முதல் கட்டமாக, மண்டலங்கள் 2 மற்றும் 4க்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம், வரும் 27 ம் தேதி, நடக்கிறது.
தாம்பரம் மேற்கு அம்பேத்கர் திருமண மண்டபத்தில், 32, 33, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 58, 59, 60, 61 ஆகிய வார்டுகளுக்கு, காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2 :30 மணிவரை.
குரோம்பேட்டை பிரதான சாலை, நியூகாலனி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், 9, 13, 14, 15, 16, 17,1 8, 19, 20, 21, 24, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு, மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

